இந்தியா

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டாம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தொழிலாளர்களை பாதுகாத்திட தொழில் முனைவோர்கள் தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து தொழிலாளர் துறை அரசு செயலர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்முனைவோர்களும், தங்கள் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொரோனா வைரசிடம் இருந்த பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.1.வெப்பக்கதிர் பரிசோதனை கருவி தொழிற்சாலை நுழைவு வாயலில் பொருத்திருக்க வேண்டும்.2.செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை தகவல்களை கையேடு, சுவரொட்டி, பதாகைகள் மூலம் காட்சிக்கு வைக்க வேண்டும்.3. மறு அறிவிப்பு வரும்வரை பயோமெட்ரிக் வருகை பதிவை நிறுத்த வேண்டும்.4. தொழிற்சாலையின் அனைத்த பிரிவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கை உறை, சோப்பு, சுத்தமான தண்ணீர், கைகழுவும் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.5. சானிடைசர்கள் கூடுதலாக தொழிற்சாலை நுழைவிடத்தில் வைத்திருக்க வேண்டும்.6. இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தொழிற்சாலையில் பொறுத்துவதற்கு முன்னதாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.7. பணியாளர்களை புதுச்சேரிக்கு வெளியே அனுப்புவதையும், அதே போன்று வெளியில் இருந்து பணியாளர்கள் புதுச்சேரிக்கு பணி நிமித்தமாகவோ, பார்வையாளராகவோ வருவதை தவிர்க்க வேண்டும்.8. பணியாளர்கள், தொழிலாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு குறித்து ஆராய வேண்டும்.9. தொழிற்சாலை வளாகத்திற்குள் தொழிலாளர்கள் திரண்டு இருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.10. தொழிற்சாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேண்டும்.11. தொழிற்சாலையில் உள்ள சிற்றுண்டி அருந்தும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் முறையாக கிருமி நாசினி அடிக்கடி தெளிக்க வேண்டும்.12. காய்ச்சல் மற்றும் நுரையீரல் பிரச்னைகளுடன் உள்ள பணியாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. அப்படிப்பட்ட பணியாளர்களை அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அனுப்பிட வேண்டும்.13. தொழிலகத்தில் அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் நுரையீரல் பிரச்னை இருப்பின், உடனடியாக மேல் நடவடிக்கைக்கு தொழிலாளர் துறையை அணுக வேண்டும்.14. முகவுறை மற்றும் கை உறைகள் பணியிலுள்ள பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.15. அடிக்கடி சுத்தப்படுத்துவதையும் தொடர்ந்து சுகாதாரமாக பணியிடங்களை வைத்திருப்பதையும் குறிப்பாக தொடும் இடங்களையும் சுத்தம் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.16.தொழிலாளர்கள் தங்களுடைய உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டும். அவர்கள் சுகவீனமாக இருப்பதாக உணர்ந்தால் தங்களுடைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிட்டு பணியிடங்களில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.17. வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பணியாளர்கள், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பணியாளர்கள் கூடுதல் கவனத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். இவர்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்த கூடாது.18.தொழிற்சாலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்த நிர்வாகம் முடிவு செய்தால் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதை சுகாதார பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களை பணியமர்த்த வேண்டும்.19. அவசர மருத்துவ சேவைக்கு உடனடியாக 104 தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.இந்த அறிவுரைகளை கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முழுமையாகவும், கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும். இது சம்பந்தமான அறிக்கையை தொழிலாளர் துறைக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X