பொது செய்தி

தமிழ்நாடு

சுய ஊரடங்கு நாளில் கூட குடும்பத்தை 'மிஸ்' செய்தோம்!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை:கொரோனா பாதிப்பை தடுக்க, கடந்த 22ல் நடந்த சுய ஊரடங்கு நாளன்று, அனைவரும் வீட்டில் ஓய்வாக, குடும்பத்துடன் கழித்தனர். ஆனால் கோவையின் முக்கிய போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து போலீசாரும், வழக்கம் போல் குடும்பத்தினரை 'மிஸ்' செய்தனர்.வித்தியாசமான அனுபவம்கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்புடன் போலீசாரும் பாதுகாப்பாக இருப்பதை, உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்றைய தினம் பணியாற்றியது சற்று வித்தியாசமாக இருந்தது.பெரியய்யா ஐ.ஜி., மேற்கு மண்டலம்குடும்பத்தை 'மிஸ்' செய்தேன்சுய ஊரடங்கு அன்று, அதிகாலையிலேயே ஒவ்வொரு சோதனை சாவடியாக பயணம் செய்தோம். அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது. பாதுகாப்பு பணிகள் அதிகம் இருந்ததால், குடும்பத்தினருடன் கலந்துரையாட முடியவில்லை.சுஜித்குமார் எஸ்.பி.,கோவை மாவட்டம்கூடுதல் பொறுப்புநாங்கள் அனைத்து நேரங்களிலும், பரபரப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சுய ஊரடங்கின் போது கூடுதலாக பொறுப்புகள் இருந்தன. குற்றச்சம்பவங்கள், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டியிருந்தது.சுமித் சரண்கோவை மாநகர போலீஸ் கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202014:39:51 IST Report Abuse
Ram Pollachi கீழ்நிலை காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அனாதையாக வீதியில் நிற்பது மிகவும் பரிதாபம். ஆனாலும் இம்மாதிரியான சூழ்நிலையிலும் மக்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் இவர்களுக்கு பாராட்டுக்கள்! நன்றி!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X