சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் 14 பேர் வீடுகளில் முடக்கம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாகர்கோவில்;ரஷ்யாவில் இருந்து கேரளா வழியாக குமரிக்கு வந்த, 14 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையினர் கண்காணிக்கின்றனர்.
ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பிய, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, 14 பேர், கேரளாவில் தங்கினர். பின், பூவாறு, ஊரம்பு வழியாக, குமரி மாவட்டத்துக்குள் வர முயன்றனர். கோழிவிளை செக்போஸ்டில், அவர்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்தனர்.அதன்பின், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். 'இதில் யாருக்கும் காய்ச்சல், சளி ஏற்பட்டால், மருத்துவமனை தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவர்' என, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர், டாக்டர் போஸ்கோ ராஜா கூறினார்.இந்நிலையில், கண்ணுமாமூட் எல்லை செக்போஸ்ட் வழியாக, நேற்று கேரள பதிவெண் பைக்கில் வந்த இருவர், குமரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றனர். தமிழக போலீசார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. திரும்பிச் சென்ற இருவரும் இரவில் வந்து, தமிழக போலீசார் மீது கற்களை வீசினர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X