இந்தியா

ரேஷன் கார்டுக்கு ரூ.10,000 பா.ஜ., தலைவர் கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் 2 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். தனியார் நிறுவனங்களில் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். மேலும், கூலித் தொழிலாளர்கள் 1 லட்சம் பேர் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேள்விக்குறியாக மாறி உள்ளது. எனவே, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில், பட்டினியில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்.இந்த தருணத்தில் ஏழை மக்களுக்கு அரசின் உதவி தேவை. தனியார் பங்களிப்புடன் இலவச உணவகங்களை அரசு திறக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தினசரி வழங்கிய உணவுக்கு பதிலாக அதற்குரிய பணத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முதல்வர் நிவாரண நிதியை தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவிட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இலவச பொது பரிசோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X