இந்தியா

வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வங்கியாளர் குழுமம் அறிவுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: வங்கி மற்றும் ஏ.டி.எம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க வங்கியாளர் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி வங்கியாளர் குழுமம் ஒருங்கிணைப்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை;கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரும் சவாலாக உள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கியாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை கையாள வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த தருணத்தில் வங்கி சேவைகள் மிகவும் முக்கியமானது.அதனால் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்கள் வழங்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு தேவையான முககவசம், கையுறை உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும்.வங்கிகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், செக் கிளியரிங் சர்வீஸ், வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகள் தொடரும். அரசு பண பரிமாற்றம் நடைபெறும்.வங்கிகளில், வாடிக்கையாளர்கள் கூட்டத்தை தவிர்க்க சமூக விலகல் முறையை பின்பற்ற வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X