இந்தியா

புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா பாதிப்பை தடுக்க, புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; பொதுமக்கள் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தடை உத்தரவை மதிக்காமல், பொதுமக்கள் ஆங்காங்கே கும்பலாக கூடி, வழக்கம்போல் தங்களின் பணிகளை மேற்கொண்டனர். கடைகள் திறக்கப்பட்டு, கும்பல் கும்பலாக பொருட்களை வாங்கினர். இது, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்,துறை செயலர்களுடன் முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:கொரோனாவிற்கு எதிராக மக்கள் ஊரடங்கை புதுச்சேரி மக்கள் சிறப்பாக கடைபிடித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தனர். பின், 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தினோம். ஆனால், மக்கள் நடமாட்டம் அதிமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமானால், எல்லோரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தி கொள்வதை தவிர வேறு மருந்துகள் கிடையாது. ஆனால் புதுச்சேரி மாநில மக்கள் அலட்சியமாக உள்ளனர்.2ம் நிலையில் புதுச்சேரிஇத்தாலியில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீனாவில் ராணுவத்தை வைத்து, மக்களை வெளியே வராமல் தடுத்ததால், கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் போர்க்கால அடிப்படையில், கொரோனா நோயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தாக்கத்தில் நாம் 2வது நிலையில் உள்ளோம். மூன்றாவது நிலைக்கு சென்றால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதையும், வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.31ம் தேதிவரை ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும். வெளியே வரும் நபர்கள் போலீசாரால் கண்காணிக்கப்படுவர்.புதுச்சேரியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் என 6000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். 300 ஓட்டல்களில் தங்கியுள்ளனர். 90 சதவீதம் பேர் திரும்பிச் சென்றுள்ளனர்.இதில் யாருக்கு கொரோனா நோய் தாக்கியுள்ளது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஓட்டல்களின் வெளிநாட்டினர் தங்கியபோது பணியாற்றிய ஊழியர்களின் பெயர்களை எடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.தொழிற்சாலைகள் மூடல்புதுச்சேரி மக்களின் நலன் கருதி சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். தொழிற்சாலை அதிபர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.வரும் 31ம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகளையும் தொழில்நிறுவனங்களையும் மூட ஒப்புதல் அளித்தனர். அதன்படி, வரும் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும். வர்த்தக தொழில் நிறுவனங்களும் மூடப்படும்.ஓட்டல்களில் சாப்பிட அனுமதியில்லை. உணவு வாங்கிச் செல்லாம். அதுவும், 5 நபர்களுக்கு மேல் ஓட்டலில் கும்பலாக இருக்கக்கூடாது.ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் சோமோட்டோ, சுகி நிறுவனத்திற்கு வரும் 31ம் தேதி வரை அனுமதியில்லை. அத்தியாவசிய துறைகள் தவிர யாரும் வெளியே வரக்கூடாது. நானும், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கூட வெளியே வரக்கூடாது.துக்கத்துக்கு கட்டுப்பாடுமருத்துவமனைக்கு வரும் கூட்டம் குறைக்கப்பட வேண்டும். எல்லா மருத்துவமனைகளிலும், கொரோனா நோய் சிகிச்சைக்கு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.தற்போது மாற்றம் செய்யப்பட்டு கோரிமேடு பல் மருத்துவமனையில் 50 படுக்கைகளும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகளும் கொரோனா நோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காரணமின்றி யாரும் வெளியே வரக்கூடாது. வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளை அனைவரும் தயவு செய்து ரத்து செய்ய வேண்டும். துக்க நிகழ்ச்சிகளை 3 மணி நேரத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும். மீறினால் கடும் நடடிக்கை எடுக்கப்படும். வங்கிகளின் நேரம்குறைக்கப்பட்டுள்ளது.எல்லா பஸ்களும் நிறுத்தப்படும். வாகன நடமாட்டம் நிறுத்தப்படும். இரு சக்கர வாகனத்தில் கூட வெளியே வரக்கூடாது. பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.மருத்துவ சிகிச்சையில் பிரசவத்திற்காக வருபவர்கள் வரலாம். அவசிய அறுவை சிகிச்சைக்கு வருவோரும் வரலாம்.கொரோனாவை தடுப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மது கடைகள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடியிருக்கும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.பெட்ரோல் பங்க் திறந்திருக்கும்'மக்கள் தினசரி பயன்படுத்தும்பால், பழங்கள், காய்கறி கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்கும். ஓட்டல்களில் உணவுகளை வாங்கிச் செல்லாம். பெட்ரோல் பங்க், காஸ் வினியோகம் இருக்கும்' என, முதல்வர் தெரிவித்தார்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்தார்.பெட்ரோல் பங்க் திறந்திருக்கும்'மக்கள் தினசரி பயன்படுத்தும் பால், பழங்கள், காய்கறி கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்கும். ஓட்டல்களில் உணவுகளை வாங்கிச் செல்லாம். பெட்ரோல் பங்க், காஸ் வினியோகம் இருக்கும்' என, முதல்வர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X