சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டவர் வீடுகளில் 'ஸ்டிக்கர்' திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 தனிமைப்படுத்தப்பட்டவர் வீடுகளில் 'ஸ்டிக்கர்' திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளில் 'கொரோனா ஸ்டிக்கர்' ஒட்டி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வெளிநாடுகள், 'கொரோனா' பாதித்த மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணிக்கிறார்கள். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு கதவுகளில் 'கொரோனா ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கவும், எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த 'ஸ்டிக்கர்' வீட்டு கதவுகளில் ஒட்டப்படுகின்றன.அதில் 'கொரோனா வைரஸ் நோய், வீட்டில் தனிமைப்படுத்துதல்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதோடு, பெயர், முகவரி, எத்தனை நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், தனிமையில் இருக்க வேண்டிய நாட்களின் விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
நேற்று திண்டுக்கல்லில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமாலுதீன், மருத்துவ அலுவலர் சீனிவாசன் தலைமையில் சுகாதாரத்துறை வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியது. மாநகராட்சி சார்பிலும் வீடுகளில் ஒட்டப்படுகிறது.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மீறி வெளியில் வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X