இந்தியா

தடை உத்தரவை மீறி கடைகள் திறப்பு: அதிகாரிகள் எச்சரிக்கையால் மூடல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி, திறக்கப்பட்டிருந்த கடைகள் அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து மூடப்பட்டன.புதுச்சேரியில் கொரோனா நோய்க்கு எதிரான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், மக்கள் ஊரடங்கிற்கு பின்பு இரவு 9:00 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று நோய் குறித்து சரியான புரிதல் இல்லாததால், 144 தடை உத்தரவுவை பின்பற்றாமல், நேற்று பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக கூடியிருந்தனர். கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தன.அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, மார்க்கெட் அனைத்தும் வழக்கம் போல் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அதிகாரிகளின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்த மதியத்திற்கு பின் கடைகள் மூடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X