இந்தியா

பிரான்ஸ் நாட்டு பயணிக்கு கொரோனா அறிகுறி ஜிப்மர் மருத்துவமனையில் 'அட்மிட்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

பாகூர்: கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி மற்றும் அவரது கார் டிரைவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றை மாநில எல்லையான முள்ளோடையில், நேற்று மாலை மருத்துவ குழுவினருடன், போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடலுாரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அதில், காரில் வந்த ஒரு நபருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.விசாரணையில்,பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதும், சுற்றுலாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்ததும்,தற்போதுகும்பகோணத்தில்இருந்து சென்னை செல்வதும் தெரிய வந்தது.இதனையடுத்து, மருத்துவ குழுவினர், அவரையும், அவரது கார் டிரைவரையும் தனிமைப் படுத்திவிட்டு, பாகூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் குமரன், இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திட உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும், போலீஸ் பாதுகாப்புடன், ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகே, அவர்களுக்கு, கொரோனா நோய் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X