சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 144 தடை: 5 கடைகளுக்கு 'சீல்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் 144 தடை உள்ள நிலையில் 5 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
'கொரோனா' பரவலை தடுக்க ராமநாதபுரத்தில் நேற்று முதல் 144 தடையுத்தரவு மாவட்ட நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதைமீறி ஸ்டிக்கர் ஒட்டும் கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட 5 கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடைகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் சீல் வைத்த பின் கூறியதாவது:ராமநாதபுரத்தில் மளிகை கடை, பால், காஸ் சிலிண்டர், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படும். அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மார்ச் 31வரை மூடப்பட வேண்டும். இதை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், உணவுகள் அதிக விலையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் போன்றவைகள் அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணத்தையும், கூட்டங்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X