சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு பன்றி வேட்டை; மூவர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

வடவள்ளி:காளப்பநாயக்கன்பாளையத்தில், காட்டு பன்றியை வேட்டையாடிய மூவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை வனக்கோட்டம் மொத்தம், 670 சதுர பரப்பளவு கொண்டது. இதில், கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, சிறுமுகை உள்ளிட்ட, 7 சரகங்கள் உள்ளன.இந்நிலையில், கோவை வனச்சரகம், மருதமலை சரகத்தில் உள்ள, காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில், காட்டு பன்றியை வேட்டையாடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு வனத்துறையினர் பிரிந்து சென்றனர். அப்போது, காட்டுப்பன்றி கறியை வைத்திருந்த, காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, ரமேஷ், 32, சுந்தரம், 51, சிவக்குமார், 40 ஆகியோரை, கையும் களவுமாக பிடித்தனர்.இதனையடுத்து, மூவரையும் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை செய்த, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மூவருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். விசாரணையின்போது, கோவை வனச்சரகர் சிவா உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X