இந்தியா

ஊரடங்கு உத்தரவு: பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?: பேரிடர் மேலாண்மை துறை விளக்கம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 31ம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பாக, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், விலக்கு அளிக்கப்பட்ட விபரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, பேரிடர் மேலாண்மை துறை செயலரான கலெக்டர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவு:பொதுமக்கள் ஊரடங்கு காலம் வரை வீடுகளில் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். பொதுமக்கள் சமூக விலகல் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.l பொதுவெளியில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.l மாநிலத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள், சேவைக்கான போக்குவரத்து தடைபடாது.l அத்தியாவசிய பொருட்கள்,பணிக்காக வரும் தனியார் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.l பொது போக்குவரத்து வாகனங்களான டாக்ஸி, ஆட்டோ இயக்க அனுமதி இல்லை. இருப்பினும் இவ்வாகனங்கள் அத்தியாவசிய பணிக்கு வரும்போது அனுமதிக்கப்படும். மாநிலத்திற்குள் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பஸ்சில் கூட்ட நெரிசல் அனுமதிக்கப்படாது. அவசர மருத்துவ சேவைக்கான வாகனங்கள் அனுமதிக்கப்படும்.l பிற மாநிலங்களுக்கான பஸ் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.l அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பணிமனைகள், குடோன் உள்ளிட்டவைகள் மூடப்படும். இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை இல்லை.l வழிபாட்டு தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படாது. இருப்பினும் மதசடங்கு, பூஜைகள் நடைபெறும்.ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டவைஅச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் செயல்படலாம்1. வங்கிகள்,ஏ.டி.எம்., மையங்கள், பி.எஸ்.என்.எல்., தபால் நிலையங்கள், இதர தொலை தொடர்புசேவைகள், மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும்.2. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்3. இன்டர்நெட், தபால், டெலிகாம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள்4. அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும் சேவை நிறுவனம்5. மருந்துகள் மற்றும் மருந்து உபகரணங்களை டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் வணிகம்6. மளிகை பொருட்கள், பால்,ரொட்டி, பழங்கள், காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன் விற்பனை மற்றும் அவர்களது போக்குவரத்து, பாதுகாப்பு கிடங்கு செயல்கள்7. ரெஸ்ட்டாரண்டுகளின் வீட்டு சேவை8. மருத்துவமனை, ஆப்டிக்கல்ஸ் ஸ்டோர்ஸ், சிகிச்சை மையங்கள், மருந்துகள் உற்பத்தி மற்றும் அதன் போக்குவரத்து9. பெட்ரோல் பங்க், எல்.பி.ஜி. காஸ், எண்ணெய் நிறுவனங்கள், அவர்களுடைய குடோன், அதன் போக்குவரத்து.10. தனியார் நிறுவனங்களின் அனைத்து செக்யூரிட்டி சர்வீஸ்கள்,11.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஒத்துழைக்கும் தனியார் நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகள்12.மாநிலத்திற்குள்ளான பஸ் சேவைகள்13.சுவட்சதா கார்பரேஷன் நிறுவனத்தின் துப்புரவு தொழிலாளர்கள்14.கால்நடை மருத்துவமனை,தீவன நிலையங்கள்இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதிகாரிகள் கவனிக்க வேண்டியவைஅனைத்து துறைகளும் பொதுமக்கள் பொதுவெளியில் பெரிய அளவில் கும்பலாக கூடாததை உறுதிக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்கள், கடைகள், நிறுவனங்கள் சமூக விலகல் இடைவெளியில் இருக்கும் படி நடத்தப்பட வேண்டும். கை கழுவுவதற்கான சானிடைசர் உள்ளிட்ட அனைத்தும் அரசு அலுவலகங்களில் இருக்க வேண்டும்.அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் எந்தவிதத்திலும் தடை செய்ய கூடாது. அனைத்து கர்ப்பிணி பெண்கள் தொடர் காணிப்பிலும், பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து மருத்துவமனைகளில் செய்யப்பட வேண்டும். இதனை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X