இந்தியா

சமூக விலகலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி: சமூக விலகலை கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி தற்காத்துகொள்ள முடியும் என தலைமை செயலர் அஸ்வனிகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா என்கிற கோவிட் வைரஸ் மிகவும் ஆபத்தானது. இது உலகில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. பலரின் உயிர்களை பறித்துள்ளது. சமூக விலகல் என்ற இடைவெளி மூலமாக தான் இதன் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.நேற்றுமுன்தினம் நடந்த நாடு தழுவிய மக்கள் ஊரடங்கில் புதுச்சேரி மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. இதுபோன்ற மனநிலை ஒவ்வொருவரிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். கொரோனா தொடர்பாக வழிகாட்டுதலை பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து கடைபிடிக்க வேண்டும்.அடுத்தகட்டமாக இன்று 24ம் தேதி முதல் வீடுகளில் பொதுமக்கள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். மருந்துகள், காய்கறிகள், பால் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கான சேவைகள் தடைபடாது. அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறும்போது, கடந்த நுாறு ஆண்டுகளில் மனித உலகம் இது போன்ற அச்சுறுதலான வைரசை கண்டதில்லை. இது வேகமாக பரவிவருகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 80 பேரை சராசரியாக சந்திக்கின்றனார். அதில் மூன்று பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிறார். கோவிட் வைரசை கட்டுப்படுத்த சமூக விலகல் எனும் இடைவெளி தான் சிறந்த முறை என்றார்.சந்திப்பின்போது கலெக்டர் அருண், உள்துறை செயலர் சுந்தரேசன், சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, தொழிலாளர் துறை அரசு செயலர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X