பொது செய்தி

தமிழ்நாடு

படுக்கை வசதிகளுடன் தயாரா இருங்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில், 100 படுக்கை வசதிகளுடன் வார்டுகள், கொரோனா தடுப்பு பணிக்கு தயார் நிலையில் இருக்க, மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் நான்கு முக்கிய மருத்துவமனைகளில் மட்டும், தனிமைப்படுத்துவதற்கான வார்டு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முன்னேற்பாடாக அனைத்து மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க கூறப்பட்டுள்ளது.இதன் படி, ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஏற்கனவே உள்ள வசதிகளின் அடிப்படையில், கூடுதலாக 25 சதவீதம் தனியாக ஒதுக்கி, தயார் நிலையில் வைக்க கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை உரிமையாளர்கள், முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்துள்ளனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் அசோகன், சுகாதார பணி இணை இயக்குனர் கிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X