இந்தியா

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் தண்டனை: முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் தண்டனை:  முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, நிதி உதவி வழங்கிட வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது; கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் சட்டம் 2005, தொற்று வியாதி தடை சட்டம் 1897 மற்றும் 144 தடை உத்தரவு புதுச்சேரியில் அமலில் உள்ளது.

இந்த சட்டத்தை மீறினால், கடும் தண்டனை விதிக்கப்படும். தற்போது கொரோனா நோய் இரண்டாம் கட்டத்தில் உள்ளது.புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மருத்துவம், பேரிடர் மீட்பு துறை, உள்ளாட்சி துறை இணைந்து செயல்படுகிறார்கள். பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்க உள்ளாட்சி துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், தீயணைப்பு துறையின், உதவியுடன் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநில எல்லைக்குள் யாரும் நுழையாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று (நேற்று) இரவு 9:00 மணி முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொண்டு வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

தனியார் வாகனங்கள் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, முதல்வரின் நிவாரண நிதிக்கு, நான் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டும். அதே போல், அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிட முன் வர வேண்டும்.மேலும், தொழில் நிறுவனங்களும், முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக வழங்கிட வேண்டும். இந்த நிதி மூலம் கொரோனா பரவலை தடுக்கவும், அதற்கு தேவையான மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்கிட உதவியாக இருக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X