பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று உள்ளே நுழையாதே!'கொரோனா'வை தடுக்க வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்.:வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பட்டியல் தயார்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தொற்று உள்ளே நுழையாதே!'கொரோனா'வை தடுக்க வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்.:வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பட்டியல் தயார்

'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், பொது இடங்களில் கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி தெளித்தல், அத்தியாவசிய பணிகளை தவிர வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம், என அறிவுறுத்தப்படுகிறது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்; குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், வெளியே வராமல், முடிந்தளவிற்கு வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு உத்தரவுகள் இருந்தாலும், சுய கட்டுப்பாட்டுடன் இதனை எதிர்கொள்ள, தனித்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிக்கை:'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய் வெளிநாட்டிலிருந்து பரவியதால், வெளிநாடுகளுக்கு சென்று விட்டு, கடந்த ஒரு மாதத்தில் திருப்பூர் மாவட்டம் திரும்பியவர்கள், எவரேனும் இருந்தால், அவர்கள் தாங்களாகவே முன் வந்து, பெயர், முகவரி போன்ற விவரங்களை, மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண், 0421- 1077; 0421- 2971199 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், அவர்கள் உடல் நலம் குறித்து, அறிந்து தேவைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நோய் பரவாமல் இருக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சுகாதாரத்துறையின் அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. உடுமலை நகரம், ஒன்றியம் மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களிலுள்ள, 14 வீடுகள் கண்டறியப்பட்டு, அவர்கள் வீடுகள் முன், சுகாதாரத்துறை சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அதில், 'கோவிட்-19/'கொரோனா' 'தொற்று உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' பெயர், முகவரி, நபர்களின் எண்ணிக்கை மற்றும் மேலும் விபரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி '104' உள்ளிட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 28 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என அதில், தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202014:53:47 IST Report Abuse
Ram Pollachi என்னங்க நாய்கள் ஜாக்கிரதை மாதிரி ஆகிவிட்டது. வெறி நாய் கடிச்சா ஊசி உண்டு, கொரோனா பிடிச்சா ஊசியுமில்லை உயிருமில்லை! அடுத்தவன் வீட்டுக்குள் நுழையும் முன் யோசிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X