பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களே தயவு செய்து வெளியில் வராதீர்கள்...!

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை;தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து தனிமைப்படுத்துவதில் அலட்சியம் காட்ட வேண்டாம்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியது அச்சுறுத்தலாகிவிட்டது.
பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களை தனி முகாமில் வைக்காமல் வீட்டு கண்காணிப்பில் வைத்தது தான் இதற்கு காரணம் என்ற சர்ச்சையும் நிலவுகிறது. தமிழகத்தில் மட்டும் 9,425 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்பது ஆறுதல்.சில நாட்களுக்கு முன் துபாய், சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த தென்மாவட்டங்களை சேர்ந்த 465 பேரில், 5 பேர் மட்டுமே தனிமை மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வீட்டு கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டனர். துபாயிலிருந்து வந்த 299 பேரிடம் தான் உத்தரவாத கடிதம் பெறப்பட்டது.இப்படி கண்காணிப்பில் இருப்பவர்களில் சிலர் அலட்சியம் காட்டுகின்றனர். இவர்களால் தமிழகத்திலும் கொரோனா சமூகப்பரவலாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் வீட்டு கண்காணிப்பில் இருந்த இருவர் வெளியில் நடமாடினர். தற்போது அவர்களுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. அவர்களால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களிடம் தொடர்பில் இருந்த 200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை சுகாதாரத்துறை தேடுகிறது. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீட்டு கண்காணிப்பிற்காக அனுப்பப்பட்ட ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் துபாயில் இருந்து வந்தவர்.வீட்டுக்காவலில் இருப்போர் சமூகப் பொறுப்பை உணருங்கள். தனி அறையிலேயே தங்க வேண்டும். மனைவி, குழந்தைகளிடம் இருந்து விலகி இருங்கள். தட்டு, தம்ளர், துண்டு, படுக்கைகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். பயன்படுத்திய கழிவறையை பிளீச்சிங், பினாயில் மூலம் கழுவ வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். ஒரு முகக்கவசத்தை 6 மணி நேரம் தான் பயன்படுத்த வேண்டும்.வெளிநபர்களை வீட்டிற்கு அனுமதிக்கக்கூடாது. குடும்பத்தினரும் வெளியில் செல்லக்கூடாது. வீடுகளை கிருமி நாசினி பயன்படுத்தி துாய்மையாக்க வேண்டும். அறிகுறி இல்லையென நினைக்க வேண்டாம். ஒரு வாரத்திற்கு பிறகு கூட பாதிப்பு ஏற்படலாம். நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறை உதவியை நாட வேண்டும், என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X