பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை: போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:கிராமங்களில் முகவர்களை நியமித்து, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருபவர்களால், தொழிலாளர்கள், பாதிப்படைந்தும், குடிமங்கலம் போலீசார் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட, 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது.குறிப்பாக, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி உட்பட பகுதிகளில், இதற்கென முகவர்கள் நியமித்து, ஜோராக விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வெள்ளை காகிதத்தில் லாட்டரி பெயர், சீரியல் நம்பர் ஆகியவற்றை குறித்து தருகின்றனர்.நாள்தோறும் இணையதளத்தில், குலுக்கல் நடத்தப்பட்டு, அதன் முடிவு அடங்கிய பட்டியல் மாலை, 6:00 மணிக்கு, முகவர்களுக்கு பிரத்யேக மொபைல் எண்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.அதை வைத்து, குறிப்பிட்ட எண்ணை வாங்கியவர்களுக்கு, பரிசு வழங்கப்படுகிறது. ரிசல்ட் தெரிவிக்கும், இடம் லாட்டரி வாங்கியவர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படுகிறது.இந்த 'ஆன்லைன்' சூதாட்டத்தை, தொழிலாளர்களை குறிவைத்து, கிராமங்களில் பரப்பி வருகின்றனர். இதற்கென நியமிக்கப்பட்ட முகவர்கள், வாரச்சந்தை நாட்களிலும், இதர நாட்களிலும், குறிப்பிட்ட இடத்தில் கூடி, தொழிலாளர்களை லாட்டரி வாங்க ஆர்வத்தை துாண்டுகின்றனர்.இவ்வாறு, ஒரு முறை லாட்டரி வாங்கி பழகிய தொழிலாளர்கள் நாள்தோறும், தாங்கள் பெறும் சம்பளத்தை லாட்டரிக்கென செலவிடும் அளவுக்கு, அச்சூதாட்டத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.சிலர் கடன் வாங்கி 'ஆன்லைன்' லாட்டரி மோசடியில் சிக்குகின்றனர். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம், குடிமங்கலம் போலீசில் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், தொழிலாளர்கள், இந்த சூதாட்டத்துக்கு அடிமையாகி, பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X