பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டோரத்தில் ஆடு, காய்கறி விற்பனை ஜோர்: வாரச்சந்தை மூடப்பட்டதால் பாதிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை;'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ரோட்டோரத்தில், ஆடு மற்றும் காய்கறிகள் விற்பனை களைகட்டியது.உடுமலை தினசரி சந்தை வளாகத்தில், வாரம்தோறும் திங்கட்கிழமைகளில், வாரச்சந்தை மற்றும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்க மாகும். இதில், காலை நேரத்தில், ஆட்டுச்சந்தையும், மாலை நேரத்தில், காய்கறி சந்தையும் செயல்படும்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, வாரச்சந்தையை மூட உத்தரவிடப்பட்டது. இருப்பினும், நேற்று காலை, உடுமலை ஆட்டுச்சந்தைக்கு, ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழக்கத்தை விட வரத்து குறைவாக இருந்தது; வியாபாரிகளும், அதிகம் வராததால், வர்த்தகம் பாதித்தது. சந்தை வளாகத்துக்குள் தடை இருந்ததால், ரோட்டோரத்திலேயே வந்திருந்த ஆடுகளை விற்பனை செய்து விட்டு திரும்பினர். இதே போல், மாலையிலும், காய்கறி சந்தை கூடவில்லை. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.சந்தை திறக்கப்படாததால், ராஜேந்திரா ரோட்டிலேயே தற்காலிகமாக கடைகள் அமைத்து, காய்கறிகளை விற்பனை செய்தனர். அரசின் தடை உத்தரவு காரணமாக, காய்கறிகளை வாங்கிச்செல்ல மக்கள் ஆர்வம் காட்டினர்.அங்கு கூட்டத்தை தவிர்க்குமாறு, சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியதால், பெரும்பாலான மக்கள் திரும்பிச் சென்றனர். நகர குடியிருப்புகளில் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனை தீவிரமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X