பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள்ள ரஜினி சாகச பயணம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement

நடிகர் ரஜினி பங்கேற்ற சாகச நிகழ்ச்சி நேற்று டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. 43 ஆண்டு சினிமா வாழ்க்கைக்குப் பின் முதன் முறையாக 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கர்நாடகாவின் மைசூர் பண்டிப்பூர் காட்டுப்பகுதியில் உள்ள தேசிய பூங்காவுக்கு வந்த நடிகர் ரஜினியை, சாகச நாயகன் பியர் கிரில்ஸ் வரவேற்றார்.மலையேற்ற வீரர்கள் போல ரஜினி உடை அணிந்திருந்தார். நடிகர் கமல், ரஜினிக்கு அனுப்பிய வீடியோ செய்தியை காண்பித்தார் பியர் கிரில்ஸ். பெங்களூருவில் கண்டக்டராக பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ரஜினி, சென்னை சினிமா இன்ஸ்டிடியூட்டில் படித்தது, கே.பாலசந்தர், தன்னை ஹீரோ ஆக மாற்றியது குறித்து பேசினார்.நீர் பாதுகாப்பு குறித்து ரஜினி கூறுகையில், 'உலகம் முழுவதும் பல 100 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவிலும் இப்படித் தான். தண்ணீரை ஆளுபவன், இந்த உலகை ஆள்கிறான்,' என்றார்.நிஜம் வேறுபின் இருவரும் சேர்ந்து 50 அடி உயரத்தில் இருந்த துருப்பிடித்த பழைய பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் பிடித்துக் கொண்டே கடந்து சென்றனர். அப்போது ரஜினி, 'இரும்பு பாலம் அதிக வெப்பமாக இருந்ததால் அதிக நேரம் பிடிக்க முடியவில்லை. சினிமா படப்பிடிப்பில் கீழே விரிப்புகள் இருக்கும். இங்கு எதுவும் இல்லாத நிலையில் கடந்து வந்தேன், ஓ மை காட்,' என்றார்.குடும்பத்தினர் குறித்து பேசிய ரஜினி, 'டிஸ்கவரி சேனல், சாகச நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை,' என்றார். பிரதமர் மோடி குறித்து கேட்ட போது, பியர் கிரில்ஸ், 'காட்டில் அவருடன் சிறிது நேரம் கழித்தேன். நகைச்சுவை உணர்வு மிக்கவர்,' என்றார்.எப்போதும் சிரிப்புஒரு மேடான பகுதியில் ஏறும் போது, கீழே விழுந்த ரஜினி கையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இருப்பினும் தொடர்ந்து ஏறிய ரஜினியிடம், 'உங்களுக்கு வயது என்ன?' என்றார் பியர் கிரில்ஸ், '70' என ரஜினி கூற, 'நீங்கள் தான் அனைவருக்கும் துாண்டுகோல், கையில் ரத்தம் வழிகிறது, இருப்பினும் சிரித்துக் கொண்டு தான் உள்ளீர்கள்,' என்றார் பியர் கிரில்ஸ்.அடுத்து ஜீப்பில் சென்ற போது டயர் பஞ்சர் ஆனது. இருவரும் சேர்ந்து டயரை மாற்றினர். ஸ்டைலாக 'கூலிங் கிளாஸ்' அணிவது எப்படி எனக் கேட்ட பியர் கிரிஸ்சிற்கு, ரஜினி தனது 'ஸ்டைலை' கற்றுக் கொடுத்தார்.பிரபலமே பிரச்னைரஜினி கூறுகையில், 'பிரபலமாக இருப்பது கடினமாக உள்ளது. நமக்கு பிடித்த இடங்களுக்கு போக முடியாது. பிடித்த விஷயத்தை செய்ய முடியாது. பிரபலமாக இருப்பதற்கு நாம் கொடுக்கும் விலை இது தான். மற்றபடி நடிக்கும் போது மட்டும் தான் நான் ரஜினி. அதன் பிறகு 'சிவாஜிராவ்' ஆகிவிடுவேன். வேறு எதையும் தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்,' என்றார்.-------------------------------------'சூப்பர் ஹீரோ'பியர் கிரில்ஸ் கூறுகையில், ''ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் எளிதாக 'நோ' சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். இருப்பினும் ரஜினி பங்கேற்றார். என் கையை பிடித்துக் கொண்டே நீரை கடந்து வந்தார். சற்று சோர்வடைந்தாலும் கடைசிவரை பங்கேற்று அசத்தினார். இதனால் தான் அவர் இந்தியா முழுவதும் நேசிக்கப்படுகிறார். பல விஷயங்களை பேசுகிறார். சுற்றுச்சூழல் குறித்து கவலைப்படுகிறார். இதற்காக அவர் மீது மரியாதை வருகிறது. நீங்க ஒரு சூப்பர் ஹீரோ ரஜினி,' என்றார்.---------------------------------------முதலைகள் இருக்குமாநீர்பகுதியை கடந்த போது 'இங்கு முதலைகள் இருக்குமா' என ரஜினி கேட்க, பியர் கிரில்ஸ் 'ஆமாம்' என்றார். பிறகு,' இங்கு மூன்று நாட்கள் கேமரா வைத்திருந்தோம், ஒருமுறை கூட முதலைகள் தென்படவே இல்லை,' என்றார். பின் இருவரும் அந்த இடத்தை கடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X