ஒளிராத உயர்மின் கோபுரம் அதிகரித்தது திருட்டு பயம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில், உயர் மின்கோபுர விளக்கு எரியாததால், இரவில் திருட்டு பயம் அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.உடுமலை ராஜேந்திரா ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு அமைந்துள்ளது. அருகில், பெரியார் நகர் உட்பட பல்வேறு குடியிருப்பு கள் உள்ளன. அப்பகுதி மக்கள், ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, நடந்துசெல்கின்றனர்.அங்கு, பொள்ளாச்சி எம்.பி., நிதி ஒதுக்கீட்டில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பு மக்கள், எளிதாக அவ்வழியாக நடந்து சென்று வந்தனர்.இந்நிலையில், பல வாரங்களாக, உயர் மின் கோபுர விளக்கு பழுதடைந்து, அப்பகுதி இருளில் மூழ்குகிறது.எனவே, அவ்வழியாக பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. திருட்டு பயமும் அதிகரித்துள்ளது. எனவே, உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X