பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை: 'கொரோனாவால்' தள்ளிப்போக வாய்ப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:'கொாரோனா' வைரஸ் பரவுவதால், மடத்துக் குளம் அமராவதி ஆலையில், குறிப்பிட்ட நாளில் இளஞ்சூடு ஏற்று விழா நடப்பதிலும்,அரவை தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.ஆண்டு தோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர்.கரும்பு

மடத்துக்குளம்:'கொாரோனா' வைரஸ் பரவுவதால், மடத்துக் குளம் அமராவதி ஆலையில், குறிப்பிட்ட நாளில் இளஞ்சூடு ஏற்று விழா நடப்பதிலும்,அரவை தொடங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் தொடங்கப்பட்டது. இதில், 15 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.ஆண்டு தோறும், 3,000 விவசாயிகள் ஒப்பந்த முறையில் ஆலைக்கு கரும்பு வழங்குகின்றனர்.கரும்பு கொள்முதல் செய்யும் பகுதி, மடத்துக் குளம், நெய்க்காரப்பட்டி, பழநி, குமரலிங்கம், கணியூர் ஆகிய, 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஏப்., தொடங்கி செப்., வரை ஆண்டுதோறும் அரவைப்பருவமாகும். சராசரியாக, தினமும், 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் இங்கு உள்ளன. கடந்த ஆண்டு, 1.28 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.நடப்பாண்டு அரவைக்காக, இந்த மாதம் 26ம் தேதி ஆலையில் கொதிகலனில் இளஞ்சூடு ஏற்றவும், இதனைதொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் கரும்பு அரவை தொடங்கவும் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.ஆனால், தற்போது 'கொரோனா' வைரஸ் பரவி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை அழிக்க அரசு பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட எல்லைகளை மூடுவது, மக்கள் ஓரிடத்தில் கூட்டமாக சேர்வதை தடுப்பது, கடைகளுக்கு விடுமுறை விடுவது, என தொடர்ந்து பல உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.அமராவதி ஆலையில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு அரவை தொடங்க வரும் 26ஆம் தேதி இளஞ்சூடு ஏற்ற திட்டமிடப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்பு எடுத்து வரவேண்டும், இதற்குப்பின் பல நுாறு தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்றினால் மட்டுமே கரும்பு அரவை செய்ய முடியும்.இந்த நிகழ்ச்சி குறிப்பிட்டபடி நடக்குமா என தொழிலாளர்களும் கரும்பு விவசாயிகளும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால், நடப்பாண்டு சர்க்கரை அரவை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X