பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மூட உத்தரவு: பணியாளர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய அறிவுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, தொழிற்சாலைகளை மூட திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் கூடுவதை தடுக்க, மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூட அறிவுறுத்தப்பட்டது. தற்போது, தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை :'கொரோனா' வைரஸ் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது மாநிலம் முழு வதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 'கொரோனா' வைரஸ் தாக்குதல் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், நெசவு ஆலைகள், சாயப்பட்டறைகள், சாயசலவை, கார்மெண்ட் பிரிண்டிங் தொழிற்சாலைகள், சைசிங் ஆலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் தாமாக முன்வந்து மூடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அனைத்து தொழிற்சாலைகளையும் உடனடியாக ஆய்வு செய்வதோடு, ஆய்வின் போது ஆலை வளாகம், ஆலை உள் வளாகம் மற்றும் பணியாளர்களுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளாத ஆலைகளின் மீது உரிய சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிறுவனங்களில் தற்போது தங்கி பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும், தொடந்து உணவு, உறைவிட மற்றும் சுகாதார வசதிகளை முறையாக நிறுவனத்தின் சார்பில் செய்து தர வேண்டும்.எக்காரணத்தை கொண்டும் பணியாளர்கள் குடியிருப்பை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X