பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களில் உணவு பொருட்கள் இருப்பு: அரசு முறையான நடவடிக்கை எடுப்பது அவசியம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு சத்துணவுக்கு தேவையான பொருட்கள் மாதம் ஒரு முறை மற்றும் முட்டை சுழற்சி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை அரசின் சார்பில் வினியோகிக்கப்படுகிறது. திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், சத்துணவு பொருட்கள் மற்றும் முட்டை இருப்பு உள்ளது.அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களாக பள்ளிக்கு வந்து கேட்கும் பட்சத்தில் முட்டை வழங்கலாம் என, சத்துணவுத்துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியது. ஆனால் தெளிவான அறிவுரை இல்லாததால், பணியாளர்களும் முட்டைகளை மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தவிர, அந்த பகுதியில் இருக்கும் வேறு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் முட்டைக்காக வருகின்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டுமா? கூடாதா என்பது தெரியாமல், பணியாளர்கள் குழம்புகின்றனர்.மேலும், அவர்ளுக்கு முட்டை வழங்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் மாணவர்களின் பெற்றோர் உட்பட பலரும் அரசியல் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு, பணியாளர்களை மிரட்டுகின்றனர். இதனால், பணியாளர்கள் பெரிதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.மேலும், உணவு தயார்படுத்தும் பொருட்கள் அதிக காலம் பயன்படுத்தக்கூடியதாக இருப்பினும், முட்டைகள் விரைவில் வீணாகும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று மாலை முதல், 31ம் தேதி வரை 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான உணவு பொருட்கள், முறையாக பயன்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X