பொது செய்தி

தமிழ்நாடு

பயறு விலை உயர்வு: விவசாயிகளுக்கு சற்று நிம்மதி

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
 பயறு விலை உயர்வு: விவசாயிகளுக்கு சற்று நிம்மதி

கூடலுார்:கூடலுாரில், பயறுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கூடலுாரில், நெல் அறுவடையை தொடர்ந்து, வயல் நிலங்களில் பாகற்காய், பயறு, கத்தரிகாய், பூசணி, மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட கோடைகால காய்கறிகளை, விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது, பாகற்காய், பயறு அதிகளவில் அறுவடை செய்து வருகின்றனர். அவை, பெரும்பாலும் கேரளாவுக்கு செல்கிறது. கிலோ, 30 ரூபாய் விலை எதிர்பார்த்த நிலையில், கடந்த வாரம் விவசாயிகளிடம், 10 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக, கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பாகற்காய் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.இதனால், விவசாயிகளிடமிருந்து, எட்டு ரூபாய்க்கு குறைவாக கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.அதே நேரம், கொரோனா வைரஸ் காரணமாக, கேரளா மக்கள் சைவ உணவுக்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் விரும்பி உண்ணும் பயறுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் விலையும் உயர துவங்கி உள்ளது.

இதனால், கடந்த வாரம் எட்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட பயறு, தற்போது, 25 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருகின்றனர். விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
விவாசாயி மோகன் கூறுகையில், ''கேராளாவில் பயறின் தேவை அதிகரித்து உள்ளதால், இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போன்று பாகற்காய் உள்ளிட்ட மற்ற காய்கறிகளும் விலை உயர்வு கிடைத்தால், ஏற்கனவே விலை குறைவினால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X