பாதை சீர்பட்டால்... எங்கள் வாழ்வு சிறக்கும்!| Dinamalar

பாதை சீர்பட்டால்... எங்கள் வாழ்வு சிறக்கும்!

Added : மார் 24, 2020 | |
பந்தலுார்:'பந்தலுார் அருகே அய்யன்கொல்லி, அத்திச்சால் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே அய்யன்கொல்லி - எருமாடு சாலை அருகே, அத்திச்சால் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும், பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில், பழங்குடியினர்

பந்தலுார்:'பந்தலுார் அருகே அய்யன்கொல்லி, அத்திச்சால் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே அய்யன்கொல்லி - எருமாடு சாலை அருகே, அத்திச்சால் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும், பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.10.6 லட்சம் ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டு, 1,000 நாட்டு கோழிகள் அரசு மூலம் வழங்கப்பட்டன. நாட்டு கோழிகள் நன்றாக வளர்ந்து தற்போது விற்பனை செய்யப்படுவதால், பழங்குடியினர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.ஆனால், தார்சாலையிலிருந்து, பண்ணைக்கு செல்லும் மேட்டுப்பாங்கான சாலை வெறும், 'சோளிங்' சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது சாலையில் கற்கள் முழுமையாக பெயர்ந்து நடந்து செல்லவே சிரமப்படுவதுடன், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், நாட்டு கோழிகள் வாங்க வரும் மொத்த வியாபாரிகள், நடந்து சென்று கோழிகளை வாங்கி வந்து வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில், ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளும், நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை தார் சாலையாக மாற்றம் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X