கூடலுார்:'கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், 31ம் தேதி வரை, கூடலுார், பந்தலுார் பகுதி மக்கள், கேரளாவுக்கு பணிக்கு செல்ல வேண்டாம்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், கொரோனா பாதிப்பை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாநில எல்லையில் உள்ள, கிராமங்களில், தொடர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.கீழ்நாடுகாணி கிராமத்தில் நடந்த கூட்டத்தில், கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் பேசுகையில், ''கொரோனா பாதிப்பை தடுக்க, அரசு துறைகள் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. இதன் பாதிப்பை கருத்தில் கொண்டு, எல்லைகளில் உள்ள மக்கள், வரும், 31ம் தேதி வரை கேரளாவுக்க பணிக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், தேவாலா டி.எஸ்.பி., கார்த்திகேயன், தாசில்தார்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கீதாராணி உட்பட பலர் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE