பொது செய்தி

தமிழ்நாடு

உலர் களத்தில் வீணாகும் நெல் மூட்டைகள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : களக்காட்டூரில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால், உலர் களத்தில், நுாற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் அப்படியே வைக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட உணவு வாணிப கழகம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 1,905 ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் இந்த விலையை காட்டிலும், 400 முதல், 500 ரூபாய் வரை, குறைவாகவே, விவசாயிகளிடம், தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்கின்றனர்.


விவசாயிகள் கவலை


இதன் காரணமாகவே, தமிழ்நாடு உணவு வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சி, செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களிலும், 70 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப் பட்டாலும், அதிக விவசாயம் நடைபெறும் சில இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாமல் விடுபட்டிருப்பதாக, விவசாயி கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:களக்காட்டூரில், மூன்று ஆண்டுகளாக அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம், இம்முறை அமைக்கப்படவில்லை.உடனடி கொள்முதல்களக்காட்டூர், காலுார், விச்சந்தாங்கல் என, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 300 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல், கொள்முதல் செய்யப்படாமல் இருக்கிறது.இதனால், களக்காட்டூர் நெல் உலர் களத்தில், நுாற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் அப்படியே கிடக்கின்றன.தமிழ்நாடு உணவு வாணிப கழகத்திடம், 10 நாட்களுக்கு முன்பாக, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

களக்காட்டூரில், குவித்து வைக்கப்பட்டு உள்ள நெல், உடனடியாக கொள்முதல் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, உணவு வாணிப கழகத்தின், மண்டல மேலாளர், உமாசங்கரிடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டைவிட, அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ''களக்காட்டூரில், உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X