தண்டவாளத்தில் கற்பூர மர ஸ்லீப்பர் ரயில்வே துறை நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் கற்பூர மர 'ஸ்லீப்பர்' ரயில்வே துறை நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
குன்னுார்:குன்னுார் மலை ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில், பாதிப்படைந்த மரக்கட்டைகள் மாற்ற கற்பூர மர 'ஸ்லீப்பர்'கள் கொண்டுவரப்பட்டன.கொரோனா முன்னெச்சரிக்கையாக, நீலகிரி மலை ரயில்கள் வரும், 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதனால், மலை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், பாலங்களில் தண்டவாளத்தை இணைக்கும் இடங்களில்

குன்னுார்:குன்னுார் மலை ரயில் பாதையில் தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில், பாதிப்படைந்த மரக்கட்டைகள் மாற்ற கற்பூர மர 'ஸ்லீப்பர்'கள் கொண்டுவரப்பட்டன.கொரோனா முன்னெச்சரிக்கையாக, நீலகிரி மலை ரயில்கள் வரும், 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதனால், மலை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், பாலங்களில் தண்டவாளத்தை இணைக்கும் இடங்களில் உள்ள, பழமை வாய்ந்த மரக்கட்டைகளை மாற்றி, அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட, 200 பிளாஸ்டிக், ரப்பர் 'ஸ்லீப்பர்'கள் பாலங்களில் இணைக்கும் பணி நடந்து வருகிறது.தொடர்ந்து, தற்போது மற்ற இடங்களில் தண்டவாளங்களின் இடையே பாதிக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, குன்னுார் ரயில் நிலைய குடியிருப்பு பகுதிகளில் அகற்றப்பட்ட கற்பூர மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 'ஸ்லீப்பர்'கள், குன்னுார் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை விரைவில் தண்டவாளங்களில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X