பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி குடிநீர் குழாய் சீரமைக்க வலியுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பள்ளிப்பட்டு : சி.என்.கண்டிகை, அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து கிடக்கிறது. இந்த கோடையில், இதை சீரமைக்க வேண்டியது அவசியம் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், சி.என்.கண்டிகை கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 70 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பஸ் வசதி இல்லாத இந்த குக்கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகள் குறைவு. மேல்நிலை கல்விக்காக, 10 கி.மீ., தொலைவில் உள்ள, கீச்சலம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், உள்ளூரில் செயல்படும் அரசு தொடக்க பள்ளியில், குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய், உடைந்து பழுதடைந்து கிடக்கிறது.

வட்டாரக் கல்வி அதிகாரிகள், பள்ளியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, அவற்றை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X