பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ஆவணங்கள் அகற்றம்: 'கொரோனா' அச்சுறுத்தலால் நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஊட்டி:'கொரோனா' அச்சுறுத்தலை அடுத்து, மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் பழைய ஆவணங்கள் அகற்றப்பட்டன.நீலகிரியில்,'கொ ரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள, 40 போலீஸ் ஸ்டேஷன்களில், பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள பழைய ஆவணங்களை அகற்றவும், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவலர் குடியிருப்புகளில் 'கிருமி நாசினி' தெளித்து துாய்மையாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், பழைய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. தொடர்ந்து, போலீஸ் ஸ்டேஷன்களில் சுற்றிலும் உள்ளாட்சி அமைப்புகளின் துாய்மை பணியாளர்கள் மூலம்,கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அருகில் வசிக்கும் போலீசாரின் வீடுகளை சுற்றிலும் துாய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.எஸ்.பி., சசிமோகன் கூறுகையில்,''கொரோனா அச்சுறுத்தலால் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பழைய ஆவணங்கள் அகற்றப்பட்டு துாய்மைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப்பட்டு வருகிறது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X