பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா - உள்ளே வராதே' :3,000 வீடுகளில் எச்சரிக்கை, 'நோட்டீஸ்'

Added : மார் 24, 2020
Share
Advertisement
'கொரோனா - உள்ளே வராதே'  :3,000 வீடுகளில் எச்சரிக்கை, 'நோட்டீஸ்'

சென்னை : ''சென்னையில், 3,000 வீடுகள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வீடுகளில், வெளியாட்கள் வருவதை தடுக்கும் வகையில், 'நோட்டீஸ்' ஒட்டப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறினார்.
சென்னையில், 'கொரோனா வைரஸ்' தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, அரசு எச்சரித்துள்ளது.இதனால், தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கிருக்கும் வீடுகளை, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக, மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், சென்னையில், 3,000 வீடுகளில் தங்கியுள்ளனர். அந்த வீடுகளில் இருப்பவர்கள், தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வெளியாட்கள், இந்த வீட்டிற்குள் செல்வதை தடுக்கும் வகையில், 'கொரோனா தொற்று; உள்ளே வராதே' என்ற
எச்சரிக்கை வாசகம் அடங்கிய, 'நோட்டீஸ்' அந்த வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X