பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

பந்தலுார்:நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய வயநாடு பகுதியில், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.நீலகிரியை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், 'வயநாடு பகுதிக்கு திரும்பும்போது, அவர்கள்குறித்த தகவல்களை மாவட்ட சுகாதார துறைக்கு தெரிவித்து, 14 நாட்கள் தனியாக இருக்கவும் வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சோலாடி அருகே, படேரி என்ற பகுதியில்,துபாயில் இருந்து வந்த ஒருவர் வழிபாட்டு தலத்துக்கு சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய சுகாதார துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.'அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யவும் மருத்துவமனை கண்காணிப்பு நிறைவு பெற்றவுடன், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,' எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, மேப்பாடியில் துபாயில் இருந்த, 2 பேர் வந்த தகவல் தெரிவிக்காமல் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த, மாவட்ட நிர்வாகம், அவர்களை கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X