மரத்தில் ஏறி விளையாடிய கரடி: அச்சத்தில் அளக்கரை மக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி அளக்கரை சாலையில், மரத்தில் ஏறி விளையாடிய கரடியால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி, கேத்தரின் வாட்டர் பால்ஸ், கேசலாடா, அரவேனு மற்றும் அளக்கரை சாலையில், சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்திற்கு இடையே தோட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.'கரடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், சுய ஊரடங்கு நடந்த நிலையில், அளக்கரை தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி, சாலையோர தோட்டத்தில் உள்ள சில்வர் மரத்தில் ஏறி விளையாடி உள்ளது.ஓரிரு தனியார் வாகனங்கள் அவ்வழியாக சென்றபோது, மரத்தில் இருந்து இறங்கி, தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து, வாகனங்கள் சென்றபிறகு மீண்டும் மரத்தில் ஏறி விளையாடி கொண்டிருந்தது.இதனை அப்பகுதியில் உள்ள தனியார் காட்டேஜில் பணிப்புரியும் தொழிலாளர் ஒருவர், தனது மொபைல் போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.பகுதி மக்கள் கூறுகையில், 'அளக்கரை சாலையில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை இல்லை. வனத்துறையினர் மக்கள் பாதுகாப்பு கருதி, கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X