பொது செய்தி

தமிழ்நாடு

மது அருந்தும் இடமான சமுதாய நலக்கூடம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

காட்டரம்பாக்கம் : புதுப்பேர் கிராமத்தில், பராமரிப்பு இல்லாமல், மது அருந்தும் இடமாக மாறிய சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காட்டரம்பாக்கம் ஊராட்சி, புதுப்பேர் கிராமத்தில், 2003ல், வனத்துறை சார்பில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதை, அப்பகுதி மக்கள், தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.சில ஆண்டுகளாக, இந்த சமுதாய நலக்கூடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதன் நுழைவாயில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தவிர, இரவில், சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாறிவிட்டது.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:திருமணம், பிறந்த நாள், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை, புதுப்பேர் சமுதாய நலக்கூடத்தில், குறைந்த செலவில் நடத்தி வந்தோம்.முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த சமுதாய கூடத்தை, பயன்படுத்த முடியவில்லை.இதனால், கூடுதல் செலவு செய்து, தனியார் மண்டபங்களை தேடி செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த நலக்கூடத்தை, அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X