பொது செய்தி

தமிழ்நாடு

வால்வுகள் பழுதாகி வீணாகும் குடிநீர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பொன்னேரி : குழாய் வால்வுகள் பழுதாகி கிடப்பதால், மீனவ கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் வீணாகி வருகிறது.

பழவேற்காடு, போலாச்சியம்மன்குளம், கணவன்துறை, ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு, பொன்னேரி அடுத்த, மெதுார் கிராம ஏரி மற்றும் ஆரணி ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், மேற்கண்ட கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் செல்லும் குழாய் பாதைகள் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ள வால்வுகள் பழுதடைந்தும், உடைப்பு ஏற்பட்டும் கிடக்கின்றன.

இதனால், குழாய் உடைப்புகள் மற்றும் பழுதடைந்த வால்வுகள் வழியாக நாள்தோறும் குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது.உடைப்புகள் வழியாக தண்ணீர் வெளியேறும் பகுதிகள், சேறும், சகதியமாக மாறி கிடக்கின்றன. மேலும், குழாய்களில் நீர்வரத்து இல்லாதபோது, மேற்கண்ட சேறும், சகதியும், அதே குழாய் உடைப்புகள் வழியாக குடிநீருடன் கலக்கிறது.இதனால், கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

மெதுார், திருப்பாலைவனம், ஆண்டார்மடம் ஆகிய பகுதிகளில், குடிநீர் வீணாகி வருவதை தடுக்கவும், சுகாதாரமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X