முழு கட்டுப்பாட்டில் அரசு மருத்துவமனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழு கட்டுப்பாட்டில் அரசு மருத்துவமனை

Added : மார் 24, 2020
Share

பந்தலுார்:பந்தலுார் அரசு மருத்துவமனை, சுகாதார துறையினரின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில், பந்தலுார் அரசு மருத்துவமனை செல்லும் இரண்டு வழிகளில், ஒன்று அடைக்கப்பட்டது.'மெயின் கேட்' வழியாக வரும் நோயாளிகளின் கைகள் கழுவிய பின்னர், 'டெர்மல்' மீட்டரில் ஆய்வு செய்த பின்னர், வெளியில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.காய்ச்சல் இருக்கும் நபர்கள் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மற்றவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருந்துகள் வெளியே வழங்கப்படுகிறது. இதன் மூலம், வைரஸ் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மருத்துவமனையின் இந்த செயல்பாட்டிற்கு மக்கள் மத்தியில் முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X