பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளில் கிருமி நாசினி இருப்பு வைக்க கமிஷனர் உத்தரவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : ''அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கிருமி நாசினி அவசியம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறினார்.

சென்னை மாநகராட்சியில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 'கிளினிக்'கள் என, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.தமிழகத்தில் இதுவரை, ஒன்பது பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 30க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உதவும், கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:சென்னையில் உள்ள, அனைத்து வகையான மருத்துவமனைகளில், கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் இருக்க வேண்டும். அவற்றை வைத்து, மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் துாய்மைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, கிருமி நாசினி தெளிக்காவிட்டாலும், சுகாதாரமற்ற நிலையில் மருத்துவமனைகள் இருந்தாலும், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வு பணிகளில், மாநகராட்சி, இணை, துணை கமிஷனர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரிய மருத்துவமனைகளில், நானே நேரில் ஆய்வில் ஈடுபடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X