சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் மக்களின்றி, 'வெறிச்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : பரபரப்பாக இருக்கும் கலெக்டர் அலுவலகம், கொரோனா வைரஸ் பீதியால், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வருகை குறைந்து, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ், பரவும் சூழல் உள்ளது. மத்திய - மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில், 144 தடை உத்தரவு போடப்பட்டு, பொதுமக்கள் கூடும் பல இடங்களை, மார்ச், 31ம் தேதி வரை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள், அவசிய சூழல் இன்றி, வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும், மக்கள் குறைதீர் கூட்டங்கள், 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர், சீதாலட்சுமி தெரிவித்திருந்தார்.இதையடுத்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் வருகை இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 16 பேர் மனு அளிக்க வந்திருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெறாமல், அலுவலக வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த, பெட்டியில் மனுக்களை போட, அதிகாரிகள் அறிவுறுத்தினார். அதேபோல், ஒவ்வொரு துறையிலும், அதிக அளவில், அலுவலர்கள் விடுப்பில் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X