பொது செய்தி

தமிழ்நாடு

வைரஸ் தடுப்பு ஊழியர்கள் பாதுகாப்பு முக்கியம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரோனா' வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் பலர், அவர்கள் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருப்பதால், பாதுகாப்பை உணர்த்தும் வகையில், அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், சுகாதாரத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில், மலேரியா தடுப்பு ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்த ஊழியர்கள், விடுமுறை இல்லாமல் பணி செய்கின்றனர். மற்றவர்களுக்கு, வைரஸ் பரவாமல் தடுக்கும் இவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என, மாநகராட்சி கருதுகிறது. சாதாரண நாட்களில், பல ஊழியர்கள் கையுறை, முக கவசம் அணியாமல் பணி செய்வர்.

அதிகாரிகள் கேட்டால், வேகமாக பணி செய்ய இடையூறாக இருப்பதாக பதில் கூறுவர். கொரோனா வைரஸ், மனிதனிடம் இருந்து பரவுவதால், கையுறை, முக கவசம் அணிவது மற்றும் கையை அடிக்கடி சுத்தம் செய்வது, ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதன் அவசியத்தை உணர வைத்து, எப்படி கை கழுவுவது என, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், எச்சரிக்கையாக பணி செய்வது, குளித்து விட்டு பணிக்கு வருவது, அதே போன்று, குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது போன்றவை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X