பொது செய்தி

தமிழ்நாடு

மெரினாவிற்கு வர வேண்டாம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement
 மெரினாவிற்கு வர வேண்டாம்!

மெரினா : சுற்றுலா தலமான மெரினாவில், நேற்று பொழுதுபோக்குவதற்காக வந்த மக்களுக்கு, காவல் துறையினர் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினர்.

சென்னையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, கோவில்கள், அருங்காட்சியகம், பார்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.மேலும் சில தனியார் நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் சுற்றுலா தலமான மெரினாவில் பொழுது போக்குவதற்காக வருகின்றனர்.

அவ்வாறு வருவோரிடம், போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வருகின்றனர். நேற்று, 200க்கும் மேற்பட்டோருக்கு அறிவுரை வழங்கி, போலீசார் திருப்பி அனுப்பினர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X