கொரோனா அச்சத்தால் சோதனை சாவடி மூடல்: எட்டு குற்றவாளிகள் ஆஜராகவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' அச்சத்தால் சோதனை சாவடி மூடல்: எட்டு குற்றவாளிகள் ஆஜராகவில்லை

Added : மார் 24, 2020
Share

ஊட்டி:கோடநாடு கொலை வழக்கில், கேரளாவை சேர்ந்த, 8 குற்றவாளிகள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தொடர்புடைய, 10 குற்றவாளிகளில், 8 குற்றவாளிகள் ஜாமினில் உள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு, அவ்வப்போது ஆஜராகி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக, இக்கொலை சம்பந்தமான சாட்சிகள் விசாரணையும் ஒருபுறம் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு, கோவை மத்திய சிறையில் உள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில், தொடர்புடைய மற்ற, 8 குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால், 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, சோதனை சாவடிகள் மூடப்பட்டதால் ஆஜராகவில்லை. இத்தகவலை, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், நீதிபதியிடம் தெரிவித்தார்.இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை, ஏப்., 20ம் தேதிக்கு, நீதிபதி வடமலை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X