பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் கண்காணிப்பில் மட்டும் 142 பேர்: 'கொரோனா' வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஊட்டி,:'வெளிநாட்டிலிருந்து வந்த, 142 பேர் வீட்டில் தனி அறையில், 28 நாட்கள் இருக்க வேண்டும்,' என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.நீலகிரியில், 'கொரோனா' முன்னெச்சரிகை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த, சுய ஊரடங்கு உத்தரவுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததுடன், சுகாதாரத்தில் தங்களை தற்காத்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.அனைத்து பொது இடங்களிலும், உள்ளாட்சி துாய்மை பணியாளர்கள் மூலம், 'கிருமி நாசினி' தெளிக்கப்பட்டு துாய்மை படுத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளில் தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டு கை கழுவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், 100 படுக்கை வசதியுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களிடம், அறிகுறி கண்டறிப்பட்டால் மட்டுமே கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை ஒருவருக்கு கூட, அத்தகைய அறிகுறி இல்லை.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''வெளிநாட்டிலிருந்து, நீலகிரிக்கு வந்த, 142 பேர், அவரவர் வீடுகளில், 28 நாட்கள் தனி அறையில் இருக்க வேண்டும் என, சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில், உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள, குழந்தைகள், வயதானவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா சம்மந்தமாக வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். மீறி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''கோத்தகிரி நெடுகுளா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், மலேசியாவிலிருந்து நேற்று வந்துள்ளார். அவருக்கு, 'கொரோனா அறிகுறி' என, பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பப்பட்ட தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த நபரை அழைத்து வந்து பரிசோதனை செய்தோம். அறிகுறி ஏதும் இல்லை. எனினும், கண்காணிப்பில் வைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X