பொது செய்தி

தமிழ்நாடு

இடம் பெயரும் தொழிலாளர்கள் நிர்வாக நெருக்கடி!சிதிலமடையும் குடியிருப்புகள்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 இடம் பெயரும் தொழிலாளர்கள் நிர்வாக நெருக்கடி!சிதிலமடையும் குடியிருப்புகள்

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் எஸ்டேட் நிர்வாகங்களின் கடும் நிதி நெருக்கடியால், பல தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதால், குடியிருப்புகள் சிதிலமடைந்து வருகின்றன.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் தோட்டங்கள், டான்டீ தேயிலை தோட்டங்கள் உள்ள நிலையில், கடந்த காலங்களில் தேயிலை தோட்டங்களில், அதிகளவிலான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வந்ததுடன், கல்வி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டது. காலப்போக்கில், நிதிநெருக்கடியால், டான்டீயில் இந்த திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது. தனியார் தோட்டங்களிலும், பல திட்டங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டதுடன், மருத்துவ வசதிகள் மட்டுமே செய்து தரப்படுகிறது.அத்துடன், காலை, 6:00 மணிக்கு பசுந்தேயிலை பறிக்க வேண்டும், குறிப்பிட்ட கிலோ பசுந்தேயிலை பறிக்காவிட்டால், சம்பள பிடித்தம், போன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.இதனால், இளைய தலைமுறையினர் கல்வியறிவில் மேம்பட்டு, தங்கள் பெற்றோரை, சமவெளிப்பகுதிகளுக்கும், உள்ளூரில் சொந்த வீடுகளுக்கும் அழைத்து செல்கின்றனர்.வட மாநிலத்தவர் அதிகம்இதன் காரணமாக, தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது, வட மாநிலத்தவர்களை அதிகளவில் குடியமர்த்தும் பணியில், தனியார் தோட்டங்கள் ஈடுபட்டுள்ளன.இவர்களுக்கு தொழிலாளர் சட்ட விதிகள் படியான, சலுகைகள், திட்டங்களை செயல்படுத்த தேவையில்லை; பறிக்கும் தேயிலைக்கு ஏற்ப கூலி என்ற அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
பாழடையும் குடியிருப்பு
இங்கு வாழ்ந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் இடம் பெயர்ந்ததால், தொழிலாளர்கள் குடியிருப்புகள் பாழடைந்து, சிதிலமடைந்து வருகின்றன. தற்போது, இவை சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில், இப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த குடியிருப்புகளை புனரமைப்பு செய்து, பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X