சோதனை சாவடியில் அவதிப்படும் போலீசார்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பந்தலுார்:தமிழக எல்லையில் உள்ள, பூலக்குண்டு சோதனை சாவடியில், எந்த வசதிகளும் இல்லாமல், போலீசார் சிரமப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.பந்தலுார் அருகே உள்ள, நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகள், நெடுஞ்சாலைகளிலும்; மணல்வயல், கோட்டூர், கக்குண்டி, பூலக்குண்டு சோதனை சாவடிகளில் கிராமப்புற சாலைகளிலும் அமைந்துள்ளன.இங்கு, 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து குற்ற செயல்களை கண்காணித்து வருகின்றனர். அதில், பூலக்குண்டு பகுதியில், வேட்டை தடுப்பு காவல் முகாம் கட்டடத்தில் போலீசார் தங்கி கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.அதில், தண்ணீர், கழிப்பிட வசதியில்லாத நிலையில், அருகிலுள்ள வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்தும், 500 மீட்டர் துாரமுள்ள அரசு பள்ளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், வனத்துறை கட்டடத்தை, போலீசார் பயன்படுத்துவதால், வனத்துறையினர் இருக்க இடமில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட போலீஸ் எஸ்.பி., இப்பகுதியில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X