வீடு கட்ட தாமதமாகும் அரசு நிதி: பழங்குடியின மக்கள் அதிருப்தி

Added : மார் 24, 2020
Share
Advertisement

கூடலுார்;கூடலுார் பகுதியில், பழங்குடி மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு, ஒதுக்கப்பட்ட அரசு நிதி கிடைக்க தாமதமாகி, பணிகள் பாதியில் நிற்பதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுாரில், செக்ஷன்-17 அரசு நிலங்களில் புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், சுப்ரீம் கோர்டை அணுகி, பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மட்டும், அனுமதி பெற்றது.தொடர்ந்து, பழங்குடி கிராம மக்களுக்கு வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, அரசு நிதி ஒதுக்கி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டது, இதில், மின். இணைப்பு, சாலை வசதிகள் போன்ற பணிகள் பெருமளவில் முடிந்துள்ளது.ஆனால், வீடு கட்டும் பணிகளுக்கான தவணை தொகை, குறித்த நேரத்தில் வழங்கப்படாததால், அப்பணிகள் பாதியில் நிற்கிறது.தேவாசோலை பகுதியில் மட்டும் இவ்வாறு, 600க்கு மேற்பட்ட வீடுகள் முழுமை பெறாமல் உள்ளதால், அவர்கள், பாதுகாப்பு இல்லாத குடிசைகளில் வசித்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில்,'அரசு வீடுக்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கி, பருவ மழைக்கு முன், பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,'இலவச வீடுகளுக்கான தவணை தொகை வழங்கப்பட்டு, பல வீடுகளின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன; பல வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில், உள்ளது, பணி முடியும் வீடுகளுக்கு தவணை தொகை தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X