பொது செய்தி

தமிழ்நாடு

மாமிச கழிவுகளை உரமாக்கும் 'கம்போஸ்டர்' : கூடலூர் நகராட்சியில் புதிய திட்டம் துவக்கம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுாரில், மாமிச கழிவுகளை பதப்படுத்தி, உரமாக மாற்றும் வகையில், புதிய 'கம்போஸ்டர்' இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் 'சில்வர்கிளவுட்' அருகே, நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு மட்கும் குப்பை உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இங்கு துணி, 'நாப்கின்' போன்றவைகளை எரித்து அழிக்க, 35 லட்சம் ரூபாய் செலவில், புதிய இயந்திரம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.ஆனால், நகரில் நாள்தோறும் வெளியேறும் மாமிச கழிவுகளை அழிக்க வசதியின்றி, நகராட்சி சார்பில், குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், 9 லட்சம் ரூபாய் செலவில், மாமிச கழிவுகளை அரைத்து பதப்படுத்தி உரமாக்கும், நவீன 'கம்போஸ்டர்' இயந்திரம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் துவக்கி வைத்து கூறுகையில், ''கூடலுார் நகரில் தினமும் அகற்றப்படும், 500 கிலோ மாமிச கழிவுகளை, அரவை இயந்திரத்தில் அரைத்து, அதனை கம்போஸ்டரில் பதப்படுத்தி உரமாக மாற்றப்படும். இதன்மூலம், கூடலுாரின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, மேலாளர் வரதராஜ் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X