பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' சிகிச்சை மையமாகிறது கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை!

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:''சிங்காநல்லுாரில் செயல்படும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, பிரத்யேகமாக, 'கொரோனா' சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், 'கொரோனா' பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம், தீவிர கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளது.கேரளா எல்லை பகுதிகளில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வகையில், சில நாட்களுக்கு முன், பிரத்யேக கண்காணிப்பு மையம், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் துவக்கப்பட்டது.தற்போது, பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்த என, ஒருங்கிணைந்த வகையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது. மேலும், இதுவரை வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்களின் பட்டியல், விரிவாக தொகுக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அலட்சியம் கூடாதுகலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 'கொரோனா' அறிகுறி இருப்பின், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை அணுகலாம்; ஒருங்கிணைந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசின், 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மட்டும், எல்லையில் அனுமதிக்கப்படும்; பிற வாகனங்கள், நபர்கள் திருப்பி அனுப்பப்படுவர்.
வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வந்து, தங்களை சோதனைக்கு உட்படுத்தாதவர்கள் இருப்பின், தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.நாளை (இன்று) மதியத்துக்குள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்;இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை சிறப்பு மையமாக மாற்றுவது தொடர்பான செயல்பாடுகள் சார்ந்த ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X