பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கலெக்டர் ஆபீசில் 'கொரோனா' உதவி மையம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : பொதுமக்களுக்கு, கொரோனா குறித்து ஆலோசனை வழங்க, சென்னை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், மக்களிடம் கொரோனா குறித்து, ஏராளமான வதந்திகள் பரவி, பீதியை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க, மத்திய - மாநில அரசுகள், 'வாட்ஸ் ஆப்' எண் மற்றும் உதவி மையங்கள் அமைத்துள்ளன.கொரோனா தகவல்கள் தொடர்பாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், 1077 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும், 044 - 2524 3454, 2951 0400, 2951 0500 என்ற எண்களில் பேசலாம். கலெக்டர் அலுவலக வரவேற்பு நுழைவாயிலில், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள, கொரோனா உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, கொரோனா குறித்து ஆலோசனை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தொலைக்காட்சி வாயிலாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X