பொது செய்தி

தமிழ்நாடு

'சம்போ' செந்திலுக்கு அடைக்கலம்!

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : 'சென்னையில், பட்டப்பகலில், சினிமா பாணியில் நடந்த வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி, 'சம்போ' செந்திலுக்கு அடைக்கலம் கொடுக்கும் முக்கிய புள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை, அண்ணா சாலையில், தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே, போக்குவரத்து விதிகளை மீறி, மார்ச் 3ம் தேதி, தாறுமாறாக சென்ற கறுப்பு நிற கார் மீது, மர்ம நபர்கள், இரண்டு வெடிகுண்டுகளை வீசி தப்பினர். சம்பவ இடத்தில், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் விசாரித்து, மர்ம நபர்களை தேடும் பணிகளை முடுக்கிவிட்டார். உடனடியாக, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, தி.நகரைச் சேர்ந்த மகேஷ், 20 மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். மேலும், மதுரை நீதிமன்றத்தில் நால்வரும், சேலம் நீதிமன்றத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். இவர்கள், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின்படி, சென்னை, பாரிமுனை, பி.ஆர்.என்., கார்டன் பகுதியைச் சேர்ந்த 'காக்கா தோப்பு' பாலாஜி, 40, தேனாம்பேட்டையைச் சேர்ந்த, 'சிடி' மணி மற்றும் வடசென்னையைச் சேர்ந்த, 'சம்போ' செந்தில், 35 ஆகிய ரவுடிகளுக்கிடையே உள்ள முன் விரோதம் காரணமாக, வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டது தெரியவந்தது.சம்பவத்தன்று, காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி மற்றும் வழக்கறிஞர்கள் இருவர், கறுப்பு நிற காரில், சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர்.

இவர்களை பின் தொடர்ந்து, இருசக்கர வாகனங்களில் சென்ற சம்போ செந்திலின் கூட்டாளிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதற்கு மூளையாக, சம்போ செந்தில் செயல்பட்டுள்ளார். இவரை ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:சம்போ செந்தில், வக்கீலுக்கு படித்துள்ளார். இவர், எந்த சம்பவத்திலும் நேரடியாக ஈடுபடமாட்டார். இவர், கல்லுாரி மாணவர்களை அடியாட்களாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மேலும், இவரிடம் துப்பாக்கி இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், சம்போ செந்திலுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபோன்ற நபர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் முக்கிய புள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்போ செந்தில் விரைவில் சிக்குவார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X